கருடன் ஓடிடியில் எப்போது?

கருடன் ஓடிடியில் எப்போது?

நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கதைநாயகனாக நடித்த திரைப்படம் கருடன்.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கருடன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 7 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு