‘கருடன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

'கருடன்' படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.

சென்னை,

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன், இப்படம் நாளை வெளியாகவுள்ளது.சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதில் படப்பிடிப்பு பணிகள், சூரி-யின் ஆக்சன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Original Article

Related posts

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை

‘நந்தன்’ படத்தை பாராட்டிய திருமாவளவன்

மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்’ படக்குழு