கருணாநிதி நினைவு நாணயம் இணையத்தில் ரூ. 4,180-க்கு விற்பனை!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் மத்திய அரசு இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா, கடந்த ஆக. 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இதையடுட்து கருணாநிதியின் நினைவு நாணயம் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. https://www.indiagovtmint.in/en/product/birth-centenary-of-kalaignar-m-karunanidhi-rs-100-unc-coin-3-folder-pack/ என்ற மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூ. 100 மதிப்புள்ள நாணயம் ரூ. 4,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக திமுக தலைமை அலுவலகத்தில் கருணாநிதி நினைவு நாணயம் ரூ. 10,000 -க்கு விற்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். நாணயம், அதிக விலைக்கு விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

மத்திய அரசு தரப்பில் கருணாநிதி நினைவு நாணயத்தின் விலை ரூ. 2,500 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இணையத்தில் ரூ. 4,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து