கரூர்: தெரு விளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தங்கள் கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்

கரூர்: தெரு விளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தங்கள் கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்

கரூர்: கரூர் அருகே, எரியாத தெரு விளக்குகளை சரி செய்யாததால் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து பொதுமக்கள் நூதனப் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போது இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் அமைந்துள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் 4-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை என்றும், பெண்கள் கழிவறை உள்ள பகுதியிலும் விளக்குகள் எரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளாளப்பட்டி பகுதி பொதுமக்கள் புலியூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொருமையை இழந்த வெள்ளாளப்பட்டி பொதுமக்கள் 4-வது வார்டு பகுதியில் உள்ள மின் கம்பங்களிலும் பெண்கள் கழிவறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு தீப்பந்தங்களை ஏற்றிவைத்து நூதனப் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெள்ளாளப்பட்டி பகுதி பொதுமக்களின் இந்த நூதனப் போராட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்