கர்நாடகம்: ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற குழந்தைகள் விபத்தில் பலி

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.

கர்நாடகத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, சுமார் 40 மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் சென்றுள்ளனர். இந்த நிலையில், கபகல் கிராமத்தின் அருகே சென்ற பள்ளிப் பேருந்தின்மீது, மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பள்ளி பேருந்தில் பயணித்த பள்ளிக் குழந்தைகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்; மேலும், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, 18 குழந்தைகள் வரையில் காயமடைந்ததால், ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாராலிம்பிக் வீராங்கனைகளை பாராட்டிய உதயநிதி!

இதனைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், விபத்தினால் வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஜி. ஹம்பையா நாயக், துணை ஆணையர் நிதீஷ் கே, காவல்துறை கண்காணிப்பாளர் புட்டமடியா, அமைச்சர் டாக்டர் சரண் பிரகாஷ் படேல் ஆகியோரும் மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதை உறுதி செய்தனர்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி