கர்நாடகா: மத்திய மந்திரி குமாரசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா, மத்திய மந்திரி எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில், கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை உள்ளிட்ட விசயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் விஜயேந்திரா விளக்கினார்.

இந்த சூழலில், மத்திய மந்திரி குமாரசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார். அவருடன், பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார். அப்போது, மந்திரி குமாரசாமி பேசும்போது திடீரென அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

அது சட்டை முழுவதும் பரவியது. இதனால், கைக்குட்டையை எடுத்து மூக்கை துடைத்து கொண்டார். இதனை தொடர்ந்து, உடனடியாக அவரை காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Related posts

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் – 57 பேர் உயிரிழப்பு

“அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்