கர்நாடக அணையில் மதகு உடைப்பு… எச்சரிக்கை விடுத்த ஆந்திர அரசு

கர்நாடகாவின் துங்கபத்ரா அணையின் மதகில் உடைப்பு… எச்சரிக்கை விடுத்த ஆந்திர மாநில அரசு!

துங்கபத்ரா அணை

கர்நாடக மாநிலம் துங்கபத்ரா அணையின் மதகுகளில், கதவு ஒன்று உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட துங்கபத்ரா அணையில் மொத்தம் 33 மதகுகள் உள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதீத மழை கொட்டியதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன. இதில் தண்ணீரின் வேகத்தை தாக்குபிடிக்கமுடியாமல் 19 ஆவது எண் மதகின் கதவு அடித்துச்செல்லப்பட்டது. இதனால் ஒருலட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் அதிகளவில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் துங்கபத்ரா அணையின் மதகு கதவு உடைந்ததால், தண்ணீர் வெளியேறும் அளவை கண்காணிக்க ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளையும் அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடுக்கடலில் திடீரென வந்த கடற்கொள்ளையர்கள்… தமிழக மீனவர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

துங்கபத்ரா அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Karnataka
,
krishna river

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்