கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி: முதல்வர்

கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி: முதல்வர் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் அதிமுக தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழுக்கங்களை எழுப்பினர்.

பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

”சட்டப்பேரவையில் அதிமுக தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்.

அதிமுகவினரின் ஆர்ப்பாட்டத்தை தவறு என்று சொல்லவில்லை; ஜனநாயக முறைப்படி போராடுவதற்கு உரிமை உண்டு; அது நியாமனது.

கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என பேரவைத் தலைவர் கூறியபிறகும், கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்