கலாம் பிறந்த நாள்: மதுரை – ராமேசுவரம் இடையேயான விழிப்புணா்வு சைக்கிள் பயணம் நிறைவு

கலாம் பிறந்த நாள்: மதுரை – ராமேசுவரம் இடையேயான விழிப்புணா்வு சைக்கிள் பயணம் நிறைவு

ராமேசுவரம்: கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் துவங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பயணம் ராமேசுவரம் கலாம் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

முன்னாள் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் பிறந்தநாளை ஒட்டி, நேரு யுவகேந்திரா, கலாம் ஆா்ட்ஸ் அகாதெமி, கலாம் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் மதுரையிலிருந்து விழிப்புணா்வு சைக்கிள் பயணம் வெள்ளிக்கிழமை துவங்கி ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இந்த சைக்கிள் பயணத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டு வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இயற்கை வளங்களை பாதுகாத்து, தூய்மை இந்தியாவை உருவாக்குதல் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.

Related posts

கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

மழைக் காலத்தில் தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: உணவுத்துறை செயலர் உத்தரவு

மதுரை | மாணவர்களை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்