கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.45 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைத்தார்.

இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை 2,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம் 23 அலங்கார வளைவு பசுமை குகை சூரியகாந்தி கூழாங்கல் பாதை மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.

இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ 200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 எனவும், மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.50, எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100 எனவும் ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது. இணையதளத்தின் வாயிலாக நுழைவுக்கட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை https: tnhorticulture in.cpetickets பெறலாம். விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தமிழ் இலக்கியம், கலை,கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

Congress Snatches Defeat From Jaws Of Victory

₹1,814 Cr Drug Haul Case: Judicial Team Certifies Factory Ops In Presence Of NCB, Two Accused & 3 Labourers

Zakir Naik Sparks Controversy In Pakistan Over Paedophilia Remarks And Customs Duty Complaint During Karachi Tour