கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 முதல் அக்.18ஆம் தேதி வரை செயல்படாது!

கனமழை அறிவிப்பு எதிரொலியை அடுத்து சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 முதல் அக். 18 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், பசுமை குகை, மர வீடு, நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், அருவி, இசை, பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றது.

பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிக்க |வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கனமழை அறிவிப்பு எதிரொலி காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை செயல்படாது என தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது