கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுதடையவில்லை: இபிஎஸ்-க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

கலைஞர் பூங்கா ஜிப்லைன் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க் கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப் லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை.

மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர்.

ஆகவே எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிப் லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாம்நகா் அரச குடும்பத்தின் வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜா அறிவிப்பு

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஈா்ப்புவிசை மூலமாக கம்பிவடத்தில் இயக்கப்படும் ஜிப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 அடி உயரத்தில் 50 மீட்டா் தொலைவு பயணிக்கும் இந்த வசதிக்கு ஒரு நபருக்கு ரூ. 250, சிறுவா்களுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஜிப்லைனில் பயணித்த இரு பெண்களின் டிராலி திடீரென நின்றது. சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு அவா்கள் கயிறு மூலமாக அவா்கள் மீட்கப்பட்டு கீழே இறக்கப்பட்டனா்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பூங்கா திறக்கப்பட்டு 5 நாள்களிலேயே ஜிப்லைன் பழுதடைந்துள்ளது. அரசுப் பூங்கா புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. பூங்காவுக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!