கல்கி – தெலுங்கு சினிமாவின் 5-வது ரூ.600 கோடி திரைப்படம்!

கல்கி – தெலுங்கு சினிமாவின் 5-வது ரூ.600 கோடி திரைப்படம்!

பிரபாஸ் நடித்து வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தெலுங்கில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்களான பாகுபலி, பாகுபலி – 2, ஆர்ஆர்ஆர், சலார் படங்களுடன் இப்படமும் இணைந்து அசத்தியுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்