‘கல்கி 2898 ஏடி’: ஓ.டி.டியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கல்கி 2898 ஏடி' ஓ.டி.டியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், இதுவரை உலகம் முழுவதும் ரூ,1,050 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இதனையடுத்து, 'கல்கி 2898 ஏடி' எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், எதிர்பார்த்தப்படி கல்கி 2898 ஏடி ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி., அரும் 22-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளது.

The dawn of a new ERA awaits you And this is your gateway into the GRAND world of Kalki⛩️#Kalki2898ADOnPrime, Aug 22#Prabhas@SrBachchan@ikamalhaasan@deepikapadukone@nagashwin7@DishPatani@VyjayanthiFilms@Kalki2898ADpic.twitter.com/9FYs2quk5C

— prime video IN (@PrimeVideoIN) August 17, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!