‘கல்கி 2898 ஏடி’ – டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர், வரும் 10- ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

!#Kalki2898AD Trailer on June 10th. @SrBachchan@ikamalhaasan#Prabhas@deepikapadukone@nagashwin7@DishPatani@Music_Santhosh@VyjayanthiFilms@Kalki2898AD@saregamaglobal@saregamasouth#Kalki2898ADonJune27pic.twitter.com/rAPJeHpuRV

— Kalki 2898 AD (@Kalki2898AD) June 5, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!