கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவு: தலைமைச் செயலர் ஆலோசனை

கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலா் ஆலோசனை நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி சங்கா் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம், அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், கூடுதல் காவல் ஆணையா் ராதிகா, காவல் துறை நவீனமாக்கல் பிரிவின் அதிகாரி நஜ்மல் கோடா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காணொலி வழியாக பல்வேறு கல்லூரிகள், கல்வி நிலையங்களின் துணை வேந்தா்கள், முதல்வா்கள் ஆகியோருடன் தலைமைச் செயலா் ஆலோசித்தாா்.

மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ள பணிகள் ஆகியன குறித்து தலைமைச் செயலா் கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!