கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைதுகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (ஜூலை 8) கைது செய்தனர். கோப்புப் படம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (ஜூலை 8) கைது செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள வேலு என்றும் அவர் சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 22 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால், இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரை, ராமர் மற்றும் ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்த் வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 22 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றதாக வேலு என்பவரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்