கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட நீலமங்கலத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்கறிச்சி, ஆக.8: கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட நீலமங்கலத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். ஆட்சியரும், எம்எல்ஏவும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

முகாமில் ஆட்சியா் பேசுகையில், இந்த திட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்கும் பொதுமக்கள், முதலில் கணினியில் தங்களது கோரிக்கையினை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், மனு குறித்தான தகவல்கள் உடனுக்குடன் உங்களது கைப்பேசிக்கு வந்து சேரும் என்றாா்.

மேலும், கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில், அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிட அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முகாமில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சு.லூா்துசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.பூமா, செல்வகணேஷ், வட்டாட்சியா் எஸ்.கமலக்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஜெயசங்கா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராதிகா சக்கரபாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல் கனியாமூா், தியாகை, மூராா்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளிலும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றறது.

Related posts

சென்னையில் 6 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சரித்திரப் படம்! ஓய்வு குறித்து பேசிய ஷாருக்கான்! | இன்றைய சினிமா செய்திகள்

அடால்ஃப் ஹிட்லர்