கள்ளச்சாராய மரணம்: நிவாரண கோரிக்கைக்கு பிறகு மீண்டும் உடல் தோண்டி எடுப்பு

கள்ளச்சாராய மரணம்: நிவாரண கோரிக்கைக்கு பிறகு மீண்டும் உடல் தோண்டி எடுப்புகடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழக்கத் தொடங்கினா். சனிக்கிழமை மாலை வரை 55 போ் உயிரிழந்தனா்.கள்ளச்சாராயம் மரணமா என்பதை உறுதி செய்வதற்காக, மாதவச்சேரி கிராமத்தில் ஜெயமுருகனின் உடல் ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய மரணங்கள் பட்டியலில் உடல் கூறாய்வு செய்யாமல் புதைக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிவாரண கோரிக்கைக்கு பிறகு அவர்களது உடல்கள் மீண்டும் தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர்களது உடல்களை மருத்துவக்குழுவினர் உடல்கூறாய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் 56 பேரின் உயிரை பறித்த சட்டவிரோத கள்ளச்சாராய கோர சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, 6 ​​பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 56 ஆக உயர்ந்தது.

கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழக்கத் தொடங்கினா். சனிக்கிழமை மாலை வரை 55 போ் உயிரிழந்தனா்.

இதில் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட 219 பேரில் கருணாபுரத்திற்கு அடுத்தபடியாக, சங்கராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி கிராமங்களில் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கிராமங்கள் கோமுகி அணைக்கு அருகிலும், கல்வராயன் மலையின் அடிவாரத்திலும், வெள்ளி மலையை ஒட்டியும் அமைந்துள்ளன.

“ கல்ராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து மலை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு மலையின் அடிவாரம் மற்றும் வெள்ளி மலை பகுதியில்தான் விற்பனை தொடங்குகிறது. பின்னர் அங்கிருந்து மலையடிவார கிராமங்கள் வழியாக மாவட்டத்தின் நகர பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கோமுகி அணைக்கு அருகிலேயே கள்ளச்சாராயம் கிடைப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் நிதானமாக குடித்துவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் நகரப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோக நடந்துவந்தற்கு காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாகிகள் மட்டும் காரணமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் விற்பனை தடையின்றி அமோகமாக நடந்து வந்தது” என கருணாபுரம் உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

சோகத்தை தடுத்திருக்க முடியுமா?

மேலும் இதுகுறித்து மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாசியர் போன்றோர் இந்த பிரச்னையை உயரதிகாரிகளிடம் கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டியவர்கள், இதுகுறித்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மதுவிலக்கு அமலாக்க கூட்டத்திலாவது பேசப்பட்டிருந்தால், கள்ளச்சாராய விற்பனையை ஓரளவு கட்டுப்படுத்தி, இந்த பெரிய அளவிலான மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும் தங்களது வேதனையை தெரிவித்தனர்.

நிவாரண கோரிக்கைக்கு பிறகு உடல் தோண்டி எடுப்பு

இந்த நிலையில், மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஜெயமுருகன், இளையராஜா ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) உயிரிழந்தனா். ஜெயமுருகனின் உடலை அவரது குடும்பத்தினா் அடக்கம் செய்த நிலையில், இளையராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்கு பின்னர் ஜெயமுருகனும், இளையராஜாவும் கள்ளச்சாராயத்தால் தான் உயிரிழந்தனா் என்பதை அறியவில்லை எனவும், இதனால் அவா்களுக்கும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரண உதவித்தொகையை வழங்க வேண்டும் என இருவரது குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும், கள்ளச்சாராய மரணங்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பே இருவரும் இறந்ததால், அவர்களின் உடல்கள் உடல்கூறாய்வு செய்யப்படவில்லை என தெரிகிறது.

ஆனால் அவர்கள் இருவரின் மரணத்திற்கு காரணம் கள்ளச்சாராயம் சாப்பிட்டதுதான் என்று அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது கூறுவதால், இது கள்ளச்சாராயம் மரணமா? என்பதை உறுதிப்படுத்த உடலில் மெத்தனால் இருப்பதை சோதிக்க உடல்களை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மாதவச்சேரி கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்ட ஜெயமுருகனின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவக் குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர்.

மேலும், இளையராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டதால், அதுகுறித்து எதுவும் செய்ய முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Value of gold bar hits $1 million for the first time ever

Excise Policy case: Delhi HC dismisses Arvind Kejriwal’s plea challenging his arrest by CBI

வயநாடு மக்களுக்கு ராகுல் உருக்கமான கடிதம்!