கள நிலவரத்துக்கு எதிரானது ஹரியாணா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்

ஹரியாணா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு எதிரானதாக உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளாரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இன்று (அக். 8) தெரிவித்தார்.

ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்.

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் கூட்டணி ஆட்சியின் முதன்மை நோக்கம்.

ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறக்கூடாது என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹரியாணாவில் தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு மாறானதாக உள்ளது. ஹரியாணா மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. மாநில மேம்பாட்டிற்காக மக்கள் என்ன நினைத்தார்களோ அதற்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிக்க | கொல்கத்தா மருத்துவமனையில் 50 மருத்துவர்கள் ராஜிநாமா!

ஹரியாணாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. வேட்பாளர்களின் புகார் மனுக்களை நாளை அல்லது நாளைமறுநாள் தேர்தல் ஆணையத்தில் அளிப்போம்.

மிகமுக்கியமான கேள்விகளை எங்கள் கட்சி வேட்பாளர்கள் முன்வைத்துள்ளனர். சதித்திட்டம் தீட்டி பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளதை ஆதாரத்துடன் ஆணையத்திடம் தெரிவிப்போம். வெளிப்படையான ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பவன் கேரா பேசியதாவது,

’’10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கத் தேர்தல். ஜம்மு – காஷ்மீர் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர். இன்றும் நாம் ஜம்மு – காஷ்மீரை ஒரு மாநிலமாகவே கருதுகிறோம். ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு – காஷ்மீரின் கண்ணியத்துக்காக எதையும் செய்யாத கட்சிக்கு எதிராக மக்கள் உற்சாகமாகத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். சிறப்பு அந்தஸ்தை நீக்கி மாநிலமாகக் கருதாமல், யூனியன் பிரதேசமாக மாற்றியது எதிர்பாராதது’’ எனக் குறிப்பிட்டார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்