கவரப்பேட்டை விபத்து: புறநகர் ரயில் சேவை நிலவரம்!

கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்த 24 மணி நேரத்தில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஒரு வழித்தடம் முழுவதும் சீரமைக்கப்பட்டு ரயில் இயக்குவதற்கு உறுதி செய்யப்பட்டது.

அந்த வழித்தடத்தில், முதல் ரயிலாக தில்லி நிஜாமுதினில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது வழித்தடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை சென்ட்ரல் – ஷாலிமார் கோரமண்டல் விரைவு ரயில் இன்று(அக். 13) காலை 9.08 மணிக்கு விபத்து நடந்த இடத்தைக் கடந்துச் சென்றது

விபத்துக்குப் பிறகு, பிரதானப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

புறநகர் சேவைகள்

புறநகர் ரயில்கள் இயக்கப்படுல் பாதைகளில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்றய(அக். 12) நாள் போல், புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து மீஞ்சூர் வரை மட்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், மறுவழித்தடத்தில் சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை (சிறப்பு) ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!