கவிதா அதிகம் படித்தவர் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதிகம் படித்தவர் என்பதற்காக அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக என கேள்வி எழுப்பியிருக்கிறது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் மாதம் கைது செய்த நிலையில், சிபிஐ ஏப்ரல் மாதம் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது மிகப்பெரிய தலைவர் கவிதா எனப்து குறிப்பிடத்தக்கது.

சூட்கேஸில் குழந்தை உடல்: டிவி நிகழ்ச்சியைப் பார்த்து மகளைக் கொன்ற பெண் கைது!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே கவிதா ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தாலும், வழக்கு விரைவாக முடிக்கப்படாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொதுவாக பெண்களின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்போது, சிறப்பு பிரிவு ஒன்றையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சட்டப்பிரிவு 45ன்படி, பண முறைகேடு வழக்கில், பெண்களுக்கு ஜாமீன் வழங்கம்போது, இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியானால்தான் ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை அவசியமில்லை என்று வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியது.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

இந்த உத்தரவில், கவிதா அதிகம் படித்தவர் என்பதை காரணம் காட்டி, அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த தில்லி உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், கவிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த தில்லி உயர் நீதிமன்றம், அவர் படித்தவர் என்பதாலும் முன்னாள் எம்.பி. என்பதாலும் மனுவை நிராகரிப்பதாகக் கூறியிருந்தது. ஆனால், ஒருவர் படித்தவர் மற்றும் பெரிய பதவியில் இருப்பவர் என்பதாலேயே அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெண் என்று அர்த்தமாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்