கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ரஹானே!

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ரஹானே!கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளார் அஜிங்க்யா ரஹானே.

நடப்பு சீசனின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து கவுன்டி அணியான லெய்செஸ்டர்ஷையருடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, நடப்பு கவுன்டி சாம்பியன்ஷிப்பின் அணியின் கடைசி ஐந்து ஆட்டங்களில் அவர் இடம்பெறுவார். மேலும், ஒரு நாள் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெய்செஸ்டர்ஷையர்ஸ் ஃபாக்ஸ் அணி தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளது.

36 வயதான அஜின்கியா ரஹானே, வியான் முல்டருக்குப் பதிலாக லீசெஸ்டர்ஷையரில் இணையவுள்ளார். ரஹானே இதுவரை முதல்தர டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் 51 சதங்கள் உள்பட 26,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 265* ரன்கள் குவித்தார்.

இந்திய அணிக்காக விளையாடிய அவர், 2016-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 188 ரன்கள் குவித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இதுகுறித்து ரஹானே கூறுகையில், “லெய்செஸ்டர்ஷையர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது விளையாட்டை ரசித்து, இந்த சீசனில் கிளப்புக்கு அதிக வெற்றிக்கு பங்களிப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்