காங்கிரஸின் ‘கை’ சின்னத்தால் பாஜகவை அறைய வேண்டும்..! வினேஷ் போகத்!

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் களத்தில் உள்ள நிலையில், அவரை எதிா்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் மல்யுத்த வீராங்கனை கவிதா தலால், ஆளும் பாஜக சாா்பில் முன்னாள் விமானி யோகேஷ் பைராகி களத்தில் உள்ளாா்கள்.

அக்.8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 2019 தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 30 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

டிங் லிரென் தற்காலிக ஓய்வு..! குகேஷ் உடனான போட்டி நடைபெறாது!

ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸின் சின்னத்தைக்கொண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும்

இது குறித்து பிரசாரத்தில் வினேஷ் போகத் பேசியதாவது:

உங்களுக்கு (மக்களுக்கு) எங்களது கட்சியின் சின்னம் என்னவென்று தெரியும். வாக்களிக்கும்போது தவறான கட்சியின் சின்னத்தை அழுத்திவிடாதீர்கள். இந்தமுறை காங்கிரஸின் கை சின்னம் அறைவதற்காக செயல்பட வேண்டும். அக்.5இல் இந்த அறை பாஜக அரசை வீழ்த்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட அவமானத்துக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் நாம் இந்தமுறை பழிவாங்க வேண்டும்.

நமது மரியாதையை மீட்டெடுக்க நமது உயிரைப் பணையம் வைக்க வேண்டியுள்ளது. நம்மிடமிருந்து மரியாதையைப் பிடுங்கும் இந்த அரசாங்கத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? என்றார்.

பிரசாரத்தில் மக்களுடன் வினேஷ் போகத்.

இந்தியா பேட்டர்களுக்கானது மட்டுமில்லை…! 3 வித கிரிக்கெட்டிலும் பும்ராதான் தலைசிறந்தவர்..! கம்பீர் புகழாரம்!

காங்கிரஸில் வினேஷ் போகத்

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது. இறுதிச் சுற்று வரை முன்னேறியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இருப்பினும், அனைவரின் கோரிக்கைகளையும் ஒலிம்பிக் சங்கம் நிராகரித்துவிட்டது. பிறகு ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிநாமா செய்தார். பின்னர், செப்.6இல் காங்கிரஸில் இணைந்தார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!