காங்கிரஸில் இணைந்தார் தில்லி முன்னாள் அமைச்சர்!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி தில்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக கௌதம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சமூக நீதிக்கான போராட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ஆம் ஆத்மியின் உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜிநாமா செய்கிறேன் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

ரயில்வே பணியிலிருந்து ராஜிநாமா செய்த வினேஷ் போகத்! காங்கிரஸில் இணைகிறாரா?

இதையடுத்து, தில்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்களால் நிலவிவந்த பிரச்னையையடுத்து, கடந்த 2022ல் கெளதம் சமூக நலத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி