காங்கிரஸ் எங்கு சென்றாலும் துயரம்தான் வருகிறது: பாஜக காட்டம்!

காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல்கள் அதிகரித்து விட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுதில்லியில் பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல், பாலியல் வன்கொடுமையாளர்கள் பெருகி விட்டதாகக் கூறினார்.

பிரேம் சுக்லா கூறியதாவது, “காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அரசுகள் ஊழல், ஒழுக்கக்கேடான செயல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களின் எஜமானர்களாக மாறிவிட்டனர். வங்காளத்தில் சாமானிய மக்களையும் மாணவர்களையும் மமதா பானர்ஜி அச்சுறுத்தினார்.

மேலும், இந்த தீ ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு வழியாக தில்லியை அடையும் என்றும் மமதா கூறினார். இந்தியா கூட்டணி நாட்டை எரிக்க விரும்புகிறது. ராகுல் காந்தி ஏற்கனவே நாட்டுக்கு தீ வைப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே, நாட்டிற்கு தீ வைப்பதாக அகிலேஷ் யாதவ் அச்சுறுத்தியிருந்தார். இந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஊழல்வாதிகளையும் பாலியல் வன்கொடுமையாளர்களையும் காப்பாற்றுவதற்காக நாட்டிற்கு தீ வைப்பதாக மீண்டும் மீண்டும் பேசுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் பிரேம் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சரவை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்: யார் இவர்?

பிரேம் கூறியதாவது, “கர்நாடக அரசின் சமூக நலத்துறை சமூகநலத் திட்டத்திற்காக நிலம் கோரியிருந்தது. ஆனால், அது மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கப்பட்டது. மின்னணு ஏலம் இல்லாமல் நிலம் ஒதுக்கப்பட்டது. மின்னனு ஏலம் மூலம் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தால், அரசுக்கு 15 முதல் 20 கோடி வரையில் வருவாய் கிடைத்திருக்கும்.

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் சம்பளத்தை வழங்க கர்நாடக அரசிடம் பணம் இல்லை; ஆனால், காங்கிரஸ் தலைவர்மீது மழை பெய்ய வைப்பதற்கு மட்டும் 15 முதல் 20 கோடி ரூபாய் உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரேம், ஹிமாசலில் நிலவி வரும் கடுமையான நிதி நிலைமையை, மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்தார். ஹிமாசலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், “ஹிமாசலின் கடுமையான நிதி நிலைமையை மேற்கோள் காட்டி, சுக்விந்தரும், அவரது அமைச்சர்களும், தலைவர்களும், வாரியங்கள், மாநகராட்சிகளின் துணைத் தலைவர்களும் தங்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை இரண்டு மாதங்களுக்கு பெறுவதை ஒத்திவைக்கப் போவதாக, சட்டப்பேரவையில் சுக்விந்தர் அறிவித்திருந்தார்.

மேலும், அவையின் மற்ற உறுப்பினர்களும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஒன்பது மலைப்பாங்கான மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம் மட்டும் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எங்கு சென்றாலும், அதனுடன் துயரத்தையும் கொண்டு வருகிறது. மக்களின் வங்கிக் கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். திவாலா நிலை விரைவாக வந்தாலும் பணம் விரைவாக வரவில்லை’’ என்று பிரேம் கூறினார்.

மேலும், தில்லி கலால் கொள்கை மோசடி தொடர்பான வழக்குகளில் பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

இதனையடுத்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மணிஷ் சிசோடியாவுக்கு 15 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்தபோது, கவிதாவுக்கு ஐந்து மாதங்களில் ஜாமீன் கிடைப்பது குறித்து சந்தேகமாக உள்ளது.

ஆனால், கேஜரிவால் இன்னும் பெறவில்லை’’ என்று கூறியிருந்தார். ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

அவனி லெகரா, மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதனைத் தொடர்ந்து, ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக “மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி பணியாற்றியது உண்மைதான்.

ஆனால், இருவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் காரணமாக தான், கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாகக் கூறப்படுவது என்பது உண்மையல்ல’’ என்று கூறியதுடன், அவர்களை அவமதித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரேம் கோரினார்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்