காங்கிரஸ் கூட்டணி முன்னிலை: காஷ்மீர் ஆப்பிள் கொடுத்து தமிழகத்தில் கொண்டாட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் கூட்டணி முன்னிலைப் பெற்றுவரும் நிலையில், தமிழகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணா தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர், காஷ்மீர் ஆப்பிள்களை மக்களுக்கு கொடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் முன்னிலை நிலவரங்களை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

ஜம்மு-காஷ்மீர்:

காங்கிரஸ் கூட்டணி – 51

பாஜக – 27

பிற கட்சிகள் – 12

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்