காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 39 பேர் பலி

பள்ளி வளாகத்தில் ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காசா,

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசிராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாகக்கூறி இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது. இருப்பினும், அந்த பள்ளி வளாகத்தில் ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருந்ததாகவும் இதன் காரணமாகவே அங்குத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்க பொய் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என்றார்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்