காசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

காசா:

காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.�

கடந்த வாரம் லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 440 பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. நேற்று லெபனான் மீது மீண்டும் வான் தாக்குதல் நடத்தியது.

அதன்பின்னர் இன்று அதிகாலையில் காசாவில் வான் தாக்குதல் நடத்தியது. மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியை குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் பலத்த காயமடைந்ததாகவும் பாலஸ்தீன மருத்துவத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகில், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மசூதி தாக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், மசூதி மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.

Related posts

150 வயது வரை வாழ்வது எப்படி…? இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் – அமெரிக்க தம்பதி வெளியிட்ட தகவல்

கொரோனா ஊரடங்கால்… நிலவின் வெப்பநிலை சரிவு; இந்திய விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்

பெண்ணை சூறையாடிய 50 பேர்; விசாரணையின்போது கற்பழிப்பு வீடியோவை பொதுமக்களும் பார்க்க கோர்ட்டு அனுமதி