108 திவ்ய தேசங்களில் நான்கை ஒருங்கேப் பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் 15 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான திருத்தலமாக விளங்குவது ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில். இவ்வளாகத்திலேயே நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது வெகு சிறப்பு வாய்ந்தது.
ஹைதராபாத் சென்று தந்தையைச் சந்திக்கிறாரா கவிதா?
அவ்வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயிலைப் புனரமைப்பு பணி மேற்கொள்ள துவக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காலை தொடங்கி ஆறு காலங்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 11 மணிக்கு மகாபூர்ணாஹூதி நடைபெற்ற பின் கலச புறப்பாடு ராஜகோபுரம் மூலவர் கோபுரம் உள்ளிட்ட ஆறு சன்னதிகளில் புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகத்தை பட்டாட்சியர்கள் செய்து வைத்தனர்.
வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
இதனைத் தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்புத் தீப ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.