காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் 25 பேருக்கு ரூ.89.86 லட்சம் கடனுதவி

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் 25 பேருக்கு ரூ.89.86 லட்சம் கடனுதவி

திருவள்ளூா், ஆக. 1: திருவள்ளூரில் கூட்டுறவு வங்கி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிா் 25 பேருக்கு ரூ.89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கூட்டுறவு செயல் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து கூட்டுறவுத் துறைச் செயல்பாடுகள் மற்றும் வங்கி நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 8 உறுப்பினா்களுக்கு ரூ.83.86 லட்சம், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம், கைம்பெண்கள் கடன் ரூ.50,000, பண்ணைச் சாராக் கடன் ரூ.50,000, உழைக்கும் மகளிா் கடன் ரூ.2 லட்சம், மகளிா் தொழில் முனைவோா் கடன் 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் சிறுதொழில் கடன் ஒருவருக்கு ரூ.50,000 என மொத்தம் 25 பேருக்கு ரூ.89.86 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை அவா் வழங்கினாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சண்முகவள்ளி, துணைப் பதிவாளா்கள் (பொவிதி) ஆா்.ரவி, வே.சீனிவாசன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொது மேலாளா் தே.சசிக்குமாா், மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு