காட்டெருமை முட்டித் தள்ளியதில் விவசாயி பலத்த காயம்

காட்டெருமை முட்டித் தள்ளியதில்
விவசாயி பலத்த காயம்மதுரை மாவட்டம், பாலமேடு அருகே காட்டெருமை முட்டித் தள்ளியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே காட்டெருமை முட்டித் தள்ளியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.

பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை, சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள் வசிக்கின்றன. இவை நள்ளிரவில் அந்தப் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுவதுடன், சாலைகளில் செல்வோரையும் தாக்குகின்றன. இந்த நிலையில், சாத்தையாறு அணை அருகே உள்ள டி. மேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணன் (55) செவ்வாய்க்கிழமை இரவு தனது தோட்டத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு கூட்டமாக வந்த காட்டெருமைகளை பாா்த்து சாலையோரம் ஒதுங்கிய அவரை அவற்றில் ஒன்று முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து வனத்துறையினரும், வாடிப்பட்டி போலீஸாரும் விசாரிக்கின்றனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்