காணாமல் போன குழந்தைகள் சடலங்களாக மீட்பு!

காணாமல் போன குழந்தைகள் சடலங்களாக மீட்பு!குழந்தைகளின் இறப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி ஊர்மக்கள் போராட்டம்பெயூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது

பாட்னாவில் தண்ணீர் நிறைந்த குழியில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில், தங்களது குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக, இரண்டு குழந்தைகளின் பெற்றோர் நேற்று (ஜூலை 14) கர்டானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, காணாமல் போன குழந்தைகளை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பாட்னாவின் பெயூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே, தண்ணீர் நிறைந்த குழியில் காணாமல் போயிருந்த குழந்தைகளின் உடல்கள் இறந்த நிலையில் சடலங்களாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

ஆனால், குழந்தைகளின் கைகால்கள் கட்டப்பட்டும், மார்பில் கத்தியால் குத்திய நிலையிலும் மற்றும் கண்களின் அருகே காயத்துடன் குழந்தைகளின் உடல் இருந்ததாகக் கூறி, குழந்தைகளின் உயிரிழப்பு சந்தேகமடைவதாக இருக்கிறது என்று குழந்தைகளின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் இறப்பில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றபோது, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைத்துள்ளனர்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்