கான்பூர் டெஸ்ட்: தொடர்ந்து 2-வது நாளாக ஆட்டம் ரத்து!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் மழை காரணமாக போட்டி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இடையிடையே மழை குறுக்கிட்டதால், ஓவர்கள் முழுவதும் வீசப்படவில்லை.

நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-ஆம் நாள் ஆட்டம் ரத்து

போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (செப்டம்பர் 28) காலை முதலே கனமழை பெய்ததால், போட்டி தொடங்குவது தாமதமானது. மழை நின்ற பிறகு, பணியாளர்கள் மைதானத்திலிருந்து நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், போட்டியை நடத்துவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால், இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 29) நடைபெறவிருந்த மூன்றாம் நாள் ஆட்டமும் மழையால் ஒருபந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

UPDATE
Play for Day 3 in Kanpur has been called off due to wet outfield.#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBankpic.twitter.com/HPPxBMhY87

— BCCI (@BCCI) September 29, 2024

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam