கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று (அக். 1) காலை தொடங்கியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை திரட்டியது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
வங்கதேசம் திணறல்! இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு!
அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு வங்கதேச அணி சுருண்டது.
இதனைத் தொடர்ந்து, 95 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களை திரட்டி வெற்றியை ருசித்தது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்:-
-
வங்கதேசம் – 233/10
-
இந்தியா – 285/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்:-
-
வங்கதேசம் – 146/10
-
இந்தியா – 98/3 (17.2 ஓவர்)
இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.