காமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் – வைரமுத்து புகழாரம்

காமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

துறவிபோல் ஒரு வாழ்வு, பொதுநலம் துறவாத தொண்டு. கஜானா தன்வசம், கரன்சி தொடாத கரம். இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல, பதவிகள். கட்டாந்தரையில் கல்விப் பயிர் வளர்த்த நல்லேர் உழவன்.

எல்லா மழையும் பூமிக்கே. சிறுதுளி நீரையும் சேமிப்பதில்லை வானம்; காமராஜர் வானம். தோழர்களே! காமராஜர் ஆட்சி அமைப்போம் – நல்ல முழக்கம்தான்; காமராஜர் ஆவோம் என்பது அதனினும் நல்ல திட்டம் அல்லவா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

துறவிபோல் ஒரு வாழ்வு
பொதுநலம் துறவாத தொண்டு
கஜானா தன்வசம்
கரன்சி தொடாத கரம்
இலவசமாய் வழங்கியவை
வேட்டி சேலைகள் அல்ல
பதவிகள்
கட்டாந் தரையில்
கல்விப் பயிர் வளர்த்த
நல்லேர் உழவன்
எல்லா மழையும் பூமிக்கே
சிறுதுளி நீரையும்
சேமிப்பதில்லை வானம்
காமராஜர் வானம்
தோழர்களே!
காமராஜர்… pic.twitter.com/hRJk0ll870

— வைரமுத்து (@Vairamuthu) July 15, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!