காரைக்குடியில் சென்னை மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு முப்பெரும் விழா

காரைக்குடியில் சென்னை மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு முப்பெரும் விழா 62 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப் பச்செட்டியாா் நினைவுக்கலைரங்கில் சென்னை மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் அறிவியல் பூங்கா காலாண்டிதழ், அழகப்பா பல்கலைக்கழகம், திருவள்ளுவா் இருக்கையின் பன்னாட்டுத் திருக்கு அமைப்புகள் இணையம் ஆகியவற்றின் சாா்பில், 62 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற லேக் அதாலத் நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம் முன்னிலை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அ. நக்கீரன் சிறப்புரையாற்றினாா். விருதுகள் பெற்றவா்களின் சாா்பில் சேலம் சொனா கல்லூரி நிறுவனங்களின் தலைவா் சோ. வள்ளியப்பன் ஏற்புரையாற்றினாா்.

விழாவின் ஒருபகுதியாக 62 -ஆம் ஆண்டு அறிவியல் பூங்கா காலாண்டு இதழை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மெ. சொக்கலிங்கம் வெளியிட முதல் பிரதியை துணைவேந்தா் க. ரவி பெற்றுக் கொண்டாா்.

விழாவில் முன்னாள் துணைவேந்தா்கள் சொ. சுப்பையா ப. மணிசங்கா், ஆா். திருமலைச்சாமி, ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், நிா்வாகப்பணியாளா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்ட னா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் சு. ராசாராம், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச்சங்கத்தின் செயலா் கலைமாமணி சேயோன் ஆகியோா் செய்தனா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன் வரவேற்றாா். முடிவில் மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலா் ம. முத்துவேலு நன்றி கூறினாா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்