காரைக்குடி அருகே பிரேக் பழுதால் பாதி வழியில் நின்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

காரைக்குடி அருகே பிரேக் பழுதால் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதி வழியில் நின்றது.

சென்னை,

சென்னை – காரைக்குடி இடையே 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் காலை 5.45 மணிக்கு சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பைண்டிங் பழுதானதால் புகை வந்தது.

பாதுகாப்பு கருதி உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் காரைக்குடியில் இருந்து வந்த ரயில்வே பொறியாளர்கள் பழுதை சரி செய்தனர். இதையடுத்து 55 நிமிடங்கள் தாமதமாக காலை 6.40 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் சிரமமடைந்தனர்.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!