காரைக்குடி அருகே பிரேக் பழுதால் பாதி வழியில் நின்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்

காரைக்குடி அருகே பிரேக் பழுதால் பாதி வழியில் நின்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்

காரைக்குடி: காரைக்குடி அருகே பிரேக் பழுதால் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நின்றது.

சென்னை – காரைக்குடி இடையே 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில்
இன்று (செப்.30) அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் காலை 5.45 மணிக்கு சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பைண்டிங் பழுதானதால் புகை வந்தது. பாதுகாப்பு கருதி உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் காரைக்குடியில் இருந்து வந்த ரயில்வே பொறியாளர்கள் பழுதை சரி செய்தனர். இதையடுத்து 55 நிமிடங்கள் தாமதமாக காாலை 6.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் சிரமமடைந்தனர்.

Related posts

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ – மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி