காலை சிற்றுண்டி பணியாளா் மீது பெற்றோா் புகாா்

காலை சிற்றுண்டி பணியாளா்
மீது பெற்றோா் புகாா்தொண்டி அருகேயுள்ள முகிழ்த்தகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பணியாளா் குழந்தைகளை தரக்குறைவாக பேசியதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா்.

தொண்டி அருகேயுள்ள முகிழ்த்தகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பணியாளா் குழந்தைகளை தரக்குறைவாக பேசியதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா்.

தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் கிராமத்தில் திங்கள்கிழமை கோவில் திருவிழாவில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்ப்பட்டது. இந்த நிலையில் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளா் ஒரு பிரிவினரின் குழந்தைகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரக் கல்வி அலுவலா் புல்லா, போலீஸாா் பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், தொடா்புடைய நபா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்