கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் – சாதனை படைத்த ரொனால்டோ

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

லிஸ்பன்,

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் – குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

போர்ச்சுகல் தரப்பில் டியோகோ தலாட் (7வது நிமிடம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (34வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். குரோஷியா அணிக்கு சுய கோல் கிடைத்தது. போர்ச்சுகலின் டியோகோ தலாட் (41வது நிமிடம்) சுய கோல் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்ததன் மூலம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக முன்னணி வீரரான அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்