காவலர் சீருடை என்றால் அலெர்ஜி.. கட்டையால் போலீசை தாக்கிய நபர்!

காவலர் சீருடை என்றால் அலெர்ஜி.. கட்டையால் போலீசை சரமாரியாக தாக்கிய நபர்.. என்ன நடந்தது?

காவலர் மீது தாக்குதல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சீருடையில் இருந்த தலைமை காவலரை ஒருவர் விறகு கட்டையால் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. போலீஸ்காரரை தாக்கியவர் யார்?

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் தாஸ். தாஸும், அவருடன் பணிபுரியும் காவலர் ஒருவரும் சேர்ந்து சாதுபேட்டை பகுதிக்கு ஒரு வழக்கு விசாரணை விசயமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

சாதுபேட்டையில் ஒரு ஹோட்டலில் பைக்கை நிறுத்தி, தாஸ் ஹோட்டலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர் கலிந்திலோ என்பவர், ஒரு விறகு கட்டையை எடுத்து காவலர் தாஸ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த காவலர் தாஸை மேலும் கட்டையால் சரமாரியாக தாக்கினார் அந்த நபர்.

விளம்பரம்

அப்போது சக காவலர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கலிந்திலோவை பிடித்து தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த உருட்டு கட்டையை பறித்தனர். விசாரணையில் கலிந்திலோவுக்கு, போலீஸ் சீருடை பிடிக்காது என்றும், போலீஸ் சீருடையில் யாராவது வந்தால் அவர்களை சரமாரியாக தாக்குவார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது… போலீசார் அதிரடி!

தாக்குதலுக்கு உள்ளான காவலர் தாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலிந்திலோவுக்கு உண்மையிலேயே இதுபோன்ற குறை இருக்கிறதா அல்லது நடிக்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். போலீஸ்காரரை தாக்கிய நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Tirupathi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்