காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை மேலும் அதிகரித்துள்ளது கர்நாடக அரசு.கோப்புப்படம்

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவை 45,651 கன அடியாக கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாள்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கபினி அணையில் இருந்து 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 651 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு