காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. எனினும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க காங்கிரஸ் முயன்றது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இருவரும் நேற்று காஷ்மீர் சென்று, தேசிய மாநாடு தலைவர்களை சந்தித்து பேசினர். இதில் தொகுதிப்பங்கீடு இறுதியானது.

அதன்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரம் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக 90 தொகுதிகளை கொண்ட காஷ்மீரில், 44 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. ஆனால் பின்னர் அப்பட்டியே அது வாபஸ் பெறப்பட்டது. பின்னர் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கான 15 வேட்பாளர்கள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது.

The Central Election Committee has selected the following persons as Congress candidates for the ensuing elections to the Legislative Assembly of Jammu & Kashmir. pic.twitter.com/wo1bkdojhv

— Congress (@INCIndia) August 26, 2024

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்