காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

வடக்கு காஸாவில் பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியானார்கள்.

வடக்கு காஸாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் 2 ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியானதாக அப்பகுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், இருவரை காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரௌடி அப்பு தில்லியில் கைது

ஹமாஸ் அமைப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே சனிக்கிழமை, தெற்கு முஸ்பா பகுதியில் உள்ள அமைச்சகத்தின் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அதன் தொழிலாளர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நூசைரத் அகதிகள் முகாமில் உள்ள பள்ளி மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பத்தில் 14 பேர் பலியாகினர். காஸாவில் இஸ்ரேலின் போரில் இதுவரை 16,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 41,391 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து