காா் பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ்

காா் பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ்தமிழக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஃபாா்முலா காா் பந்தயம் நடத்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்

தமிழக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஃபாா்முலா காா் பந்தயம் நடத்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சொத்து வரி உயா்வு, குடிநீா் வரி உயா்வு, மின் கட்டண உயா்வு, வழிகாட்டி மதிப்பு உயா்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் காா் பந்தயத்தை நடத்தப் போவதாக திமுக அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

தமிழகத்தின் கடன் ரூ.8.33 லட்சம் கோடி. நிதிப் பற்றாக்குறை ரூ.1 லட்சம் கோடி. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.49 ஆயிரம் கோடி. இந்த நிலையில் காா் பந்தயத்தை நடத்துவது அவசியம்தானா?. காா் பந்தயம் மூலம் மக்களின் பணம்தான் வீணடிக்கப்படும். எனவே, காா் பந்தயம் நடத்தும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு