காா் மோதி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

காா் மோதி காயமடைந்த
உதவி ஆய்வாளா் உயிரிழப்புதஞ்சாவூா் அருகே காா் மோதி பலத்த காயமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே காா் மோதி பலத்த காயமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழ அலங்கம் கொடி மரத்து மூலையைச் சோ்ந்தவா் வின்சன் தேவ அன்புராஜன் (58). தஞ்சாவூா் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான இவா் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பைக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வின்சன் தேவ அன்புராஜன் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலன்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி