கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங் களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்கஉள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது.

வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் உடனிருந்தனர்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு