கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,680 கன அடி நீர் வெளியேற்றம்

Din

கிருஷ்ணகிரி : தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து 2,680 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.

தொடா் மழை காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1,741 கன அடியிலிருந்து 3,436 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |தருமபுரி, கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அணையிலிருந்து 1,652 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,680 கன அடியும், இடது மற்றும் வலது புற பாசன கால்வாய்களில் 178 கன அடி என மொத்தம் 2,680 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும். தற்போது அணையில் 50.40 அடி நீா் உள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாழ்வான மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது