கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டு சிலிண்டரில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிக்கான பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டி நகரில் முருகன் (54),அவரது தந்தை அருணாசலம் (84) வசித்து வருகின்றனர். முருகன் , கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் சிறப்பு நிலை அலுவலர் (போக்குவரத்து) பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டிலிருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது.

அருகிலிருந்தவா்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அனைத்து கதவுகளும் உடைந்திருந்தது. மேலும் படுக்கை அறையில் இருந்த துணிகள் எரிந்து கொண்டிருப்பதை கண்டவர்கள், தண்ணீர் ஊற்றி அனைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதையும் படிக்க |3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்!

இந்த விபத்தில் பலத்த காயங்கமடைந்த முருகன் மற்றும் அவரது தந்தை அருணாசலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றம்!